தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'நல்ல சினிமாக்களை கை விட்றாதீங்க' - நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் - விக்ரம்

விக்ரம் திரைப்படத்தின் 100ஆவது நாள் சிறப்பு கொண்டாட்டம் இன்று(செப்.16) கோவையில் நடைபெற்றது.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

By

Published : Sep 16, 2022, 7:03 PM IST

கோயம்புத்தூர்:கே.ஜி. திரையரங்கில் விக்ரம் திரைப்படத்தின் 100ஆவது நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இவ்விழாவில், நடிகர் கமல்ஹாசன், ரெட்ஜெயின்ட் மூவி மேலாளர் செண்பக மூர்த்தி, திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சக்தி சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நடிகர் கமல்ஹாசனுக்கு சிறப்பு அலங்கார வளைவுகள் வைத்து வரவேற்பு அளிக்கப்பட்டன. முன்னதாக திரையரங்க ஊழியர்களுக்கு நினைவுப்பரிசுகளை கமல்ஹாசன் வழங்கினார்.

விழா மேடையில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், ”சினிமாவில் நடிக்க ஆரம்பத்தில் என்னை நீதான அந்த புள்ளைன்னு கேட்ட போது மகிழ்ச்சி அளித்தது. ஆனால், ஆரம்ப காலத்தில் நான்கு படங்கள் நடித்தும் என்னை யாரும் கண்டுகொள்ளவில்லை. அதை மாற்றவும் உழைத்தேன்.

'நல்ல சினிமாக்களை கை விட்றாதீங்க' - நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள்

சினிமாவில் சாதித்தது எனக்காக மட்டும் என பெருமை பீத்திக்கொள்ள முடியாது. ஓடிடி காலகட்டத்தில் பழைய திரையரங்குகளை மல்டி ப்ளெக்ஸ் தியேட்டர்களாக மாற்றி இளைஞர்கள் முன் வந்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஓடிடி குறித்து முன்கூட்டியே சொல்லியிருந்தேன். இப்போது வந்துவிட்டது. திரையரங்குகளில் உணவகம் வரப்போகிறது. அமெரிக்காவில் வந்துவிட்டது. உணவகமும் தொழில் தான், சினிமாவின் மவுஸ் இன்னும் குறையவில்லை.

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு போன்று சினிமாவும் தான். 63 ஆண்டு காலமாக என்னை வாழ வைத்துள்ளது.
நல்ல சினிமாக்களை கை விட்டுறாதீங்க. நல்ல நடிகர்களை வாழ்த்துங்கள். மக்கள் வாழ்த்தினால் சம்பளம் இரண்டு மடங்கு ஆகும். என்னை மட்டுமல்ல. நன்றாக நடிக்கிற நடிகரை வாழ்த்துங்கள்.

எங்கள் சினிமா இன்னும் சிறப்பாக இருக்கும். வட இந்தியாவில் பயப்படுகிறார்கள், தென் சினிமா பக்கம் அனைவரின் பார்வை திரும்பிவிட்டது. என் குடும்பமும் சினிமாவில் தான் இருக்கு. புதிதாக வரக்கூடிய நடிகர்களை உற்று கவனித்து வருகிறேன். என்னிடம் இல்லாததை புதிய நடிகர்களிடம் இருந்து எடுத்துக்கொள்கிறேன். எனக்கு பிடித்த ஊர் கோவை.

கோவையில் விக்ரம் க்ளைமேக்ஸ் படம் எடுக்கும்போது எனக்கு கரோனா வந்துவிட்டது. ராஜ்கமல் நிறுவனம் 53ஆவது படத்தைத் தயாரித்து வருகிறது. குறைந்த காலகட்டத்தில் 100ஆவது திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என நினைக்கிறேன். அது பேராசை கிடையாது.

'நல்ல சினிமாக்களை கை விட்றாதீங்க' - நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள்

ஃபேன், ஏசி வந்தவுடன் ஏரி கரையில் நடக்குறோம்ல.. அந்த மாதிரி தான் சினிமா. சீனாவில் 50 ஆயிரம் சினிமா தியேட்டர்கள் உள்ளன. அதைவிட கூட்டம் இங்கு இருக்கு. சினிமா வளர அதை நாம் இங்கு செய்ய வேண்டும்' என்றார்.

இதையும் படிங்க: சினம் படம் பார்வையாளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் - நடிகர் அருண் விஜய்


ABOUT THE AUTHOR

...view details