தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நடிகர் விஜயின் 'வாரிசு ஓடிடி ரிலீஸ்'... எப்போது தெரியுமா? - Successor movie on Amazon Prime OTT site

இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வெளியான வாரிசு திரைப்படம் வருகிற 22ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜயின் வாரிசு ஓடிடி ரிலீஸ்... எப்போது தெரியுமா?
நடிகர் விஜயின் வாரிசு ஓடிடி ரிலீஸ்... எப்போது தெரியுமா?

By

Published : Feb 10, 2023, 4:34 PM IST

சென்னை: தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி தமிழில் நடிகர் கார்த்தி, நாகர்ஜுனா நடித்த தோழா படத்தை இயக்கினார். பின்னர், விஜய்யை வைத்து இவர் இயக்கிய‌ படம்‌ வாரிசு. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் உலகம் முழுவதும் கடந்த மாதம் 11ஆம் தேதி வெளியானது.

விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். தில் ராஜூ இப்படத்தை தயாரித்திருந்தார். இவர்களுடன் நடிகர்கள் சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷ்யாம், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தமன் இசை அமைத்திருந்தார். இப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதோடு உலகம் முழுவதும் இதுவரை ரூ.300 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. படம் வெளியாகி கிட்டத்தட்ட 25 நாட்களைக் கடந்தபோதும் இன்று வரை நிறைய திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் இப்படத்தின்‌ ஓடிடி வெளியீடு எப்போது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். வாரிசு படத்துடன் வெளியான அஜித்தின் துணிவு திரைப்படம் சில தினங்களுக்கு முன் ஓடிடியில் வெளியானது. துணிவு திரைப்படம் வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதனால் வாரிசு படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே வாரிசு திரைப்படம் இந்த மாதம் 22ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி வெளிநாடுகளில் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. விஜய்க்கு இந்த ஆண்டின் தொடக்கமே வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். இதன்‌ படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:எனது 12 ஆண்டு கால கனவு இப்படத்தில் உள்ளது - 'டாடா' படம் குறித்து நடிகர் கவின் உருக்கம்

ABOUT THE AUTHOR

...view details