தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

தனுஷின் 'கேப்டன் மில்லர்' ஷூட்டிங்கிற்கு தென்காசி ஆட்சியர் அனுமதி.. ஆனா ஒரு கண்டிஷன்!

தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர்(Captain Miller) படப்பிடிப்பிற்கு விதிக்கப்பட்ட நிலையில், தற்போது கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பை நடத்த தென்காசி மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார்.

Captain Miller
கேப்டன் மில்லர்

By

Published : Apr 28, 2023, 1:52 PM IST

தனுஷின் "கேப்டன் மில்லர்" படப்பிடிப்பிற்கு மீண்டும் அனுமதி: ஆட்சியர் அறிவிப்பு!

தென்காசி: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் 'கேப்டன் மில்லர்'. இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் மற்றும் டேனியல் பாலாஜி, மூர், நாசர் மற்றும் சில முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

இந்த திரைப்பட படப்பிடிப்பானது தென்காசி மாவட்டம் மத்தளம் பாறை - பழைய குற்றாலம் வழியே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள களக்காடு முண்டந்துறை(Buffer Zone) பகுதியில் பிரமாண்ட செட் அமைத்து குண்டு வெடிப்பு மற்றும் சண்டை காட்சிகள் படமாக்கப்படுகிறது.

இவ்வாறு அதிக சத்ததுடன் படபிடிப்பு நடைபெறுவதாகவும், தீ மூட்டி விலங்குகளை அச்சுறுத்துவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு தீயணைப்பு துறை மற்றும் வனத்துறை ஆகியோரிடம் உரிய அனுமதி பெறாத காரணத்தினால், படப்பிடப்பினை நடத்துவதற்கு கடந்த 3 நாட்களுக்கு முன் தற்காலிகமாக தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் கேப்டன் மில்லர் திரைப்பட பட குழுவின் மேலாளர் பழனியப்பன் மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரனை நேரில் சந்தித்து உரிய அனுமதி பெறுவதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தார். அதன் பின்னர், நாளை(ஏப்ரல் 29) முதல் படப்பிடிப்பினை கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கு ஆட்சியர் அனுமதி அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷூட்டிற்கு திடீர் தடை விதிக்கப்பட்டதால் படக்குழுவினர் கவலையில் இருந்தனர். தற்போது 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் படப் பிடிப்பிற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதையும் படிங்க: Kandaswamy IPS: அமித்ஷாவை கைது செய்தவர்.. அரசியல்வாதிகளை அலற விட்டவர்.. ஓய்வு பெறுகிறார் கந்தசாமி ஐபிஎஸ்!

ABOUT THE AUTHOR

...view details