தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'டான்' திரைப்படத்தையும் கைப்பற்றிய ரெட் ஜெயன்ட்ஸ் - உதயநிதி ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் நடிக்கும் “டான்” படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை ரெட் ஜெயன்ட் மூவீஸ் கைப்பற்றியது.

”டான்” திரைப்படத்தையும் கைப்பற்றிய ரெட் ஜெயன்ட்ஸ்
”டான்” திரைப்படத்தையும் கைப்பற்றிய ரெட் ஜெயன்ட்ஸ்

By

Published : Apr 6, 2022, 11:11 PM IST

சென்னை: லைகா - சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்க இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், SJ சூர்யா, சமுத்திரகனி, சூரி நடிப்பில் உருவான படம், 'டான்'.

இப்படம் மே 13அன்று வெளியாக உள்ளதாக முன்னரே அறிவிப்பு வெளியானது. தற்போது டான் படத்தின் தமிழ்நாடு திரையரங்கு விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் கைப்பற்றியுள்ளது. இன்று(ஏப்.6) நடந்த இந்நிகழ்வின் போது நடிகரும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின், லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை நிர்வாகி G.K.M.தமிழ் குமரன், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி, சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணை தயாரிப்பாளர் கலையரசு, ரெட் ஜெயன்ட் மூவீஸ் விநியோக நிர்வாகி ராஜா.C ஆகியோர் இருந்தனர்.

இதையும் படிங்க:தலைப்பைக் கேட்டு சான்றிதழ் தர மறுத்த சென்சார் போர்டு - 'வாய்தா' பட இயக்குநர்

ABOUT THE AUTHOR

...view details