தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

”கேசினோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் இயக்குநர் விக்னேஷ் சிவன்! - Vignesh Sivan

மாதம்பட்டி சினிமாஸ் & MJ Media Factory தயாரிப்பில், இயக்குநர் மார்க் ஜோயல் இயக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும் “கேசினோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

”கேசினோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார், இயக்குநர் விக்னேஷ் சிவன் !
”கேசினோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார், இயக்குநர் விக்னேஷ் சிவன் !

By

Published : Jul 5, 2022, 11:00 PM IST

மாதம்பட்டி சினிமாஸ் & MJ Media Factory தயாரிப்பில், இயக்குநர் மார்க் ஜோயல் இயக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும் “கேசினோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

புதுமையான வகையில், ஒரு இரவில், ஒரு கட்டடத்திற்குள் நடக்கும் பரபரப்பு சம்பவங்களை மையப்படுத்தி, ஒரு பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே புதுமையான வகையில் ஒரு காமிக்ஸ் போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதுமையான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக் வெளியான வேகத்தில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் முழுக்க கோயம்புத்தூரில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் காட்சிகளில் 70 சதவீதம் ஒரு கட்டடத்திற்குள் நடக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.

மெஹந்தி சர்க்கஸ் நாயகன் மாதம்பட்டி ரங்கராஜ் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, வாணி போஜன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ரமேஷ் திலக், ஜான் மகேந்திரன், ‘எரும சாணி’ அமர் கீர்த்தி, நக்கலைட்ஸ் செல்லா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

’கேசினோ’ படத்தின் டீசர், டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:letterboxd இணையதள தரவரிசை பட்டியல் - இரண்டாம் இடம் பிடித்த ’கடைசி விவசாயி’ திரைப்படம்

ABOUT THE AUTHOR

...view details