தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

விஜயகாந்த் மகனை இயக்கும் சசிகுமார்! - இயக்குநர் சசிகுமார்

நடிகர் சசிகுமார் அடுத்து இயக்கும் இணையத்தொடரில் நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியனை நடிக்க வைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜயகாந்த் மகனை இயக்கும் சசிகுமார்!
விஜயகாந்த் மகனை இயக்கும் சசிகுமார்!

By

Published : May 11, 2022, 5:50 PM IST

நடிகர் சசிகுமார் 'சுப்பிரமணியபுரம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். அப்படம் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது. அதனைத்தொடர்ந்து ’ஈசன்’ படத்தை இயக்கினார். பின்னர் நடிகரான சசிகுமார் படம் இயக்குவதில் கவனம் செலுத்தாமல் இருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் படம் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

எழுத்தாளரும் நடிகருமான வேல.ராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை நாவலை இணையத்தொடராக இயக்குகிறார், சசிகுமார்.
ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தயாரிக்க விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு காளையை வளர்க்கும் ஷீலா ராஜ்குமார்

ABOUT THE AUTHOR

...view details