'மெளனகுரு', 'மகாமுனி' ஆகிய படங்களால் தனது திறமையை நிரூபித்தவர், இயக்குநர் சாந்தகுமார். அவரது அறிமுகப்படமான 'மெளன குரு' விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப்பெற்றது.
மௌனகுரு இயக்குநர் சாந்தகுமார் இயக்கும் புதிய படம் இதுதான்! - இயக்குநர் சாந்தகுமார்
'மெளனகுரு', 'மகாமுனி' புகழ் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ்- தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் 'புரொடக்ஷன் நம்பர் 1' பூஜையுடன் தொடங்கியது.
மேலும், இந்தப்படம் இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டபோதும் அங்கும் வசூலில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அவரது, இரண்டாவது படைப்பான 'மகாமுனி', பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் 30 விருதுகளை வென்றது.
இப்போது இயக்குநர் சாந்தகுமார் தன்னுடைய மூன்றாவது படத்தை 'டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி' பேனரின் கீழ் இயக்க இருக்கிறார். கதையின் முன்னணி கதாபாத்திரத்தில் அர்ஜூன் தாஸ் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர். சென்னையில் எளிய முறையிலான பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது.
ஒரு குறிப்பிட்ட வகைக்குள் வராத புதிய ட்ரெண்டை தமிழ் சினிமாவில் உருவாக்கிய படங்கள் என்றால் அது சாந்தகுமாரின் முந்தைய படங்களான 'மகாமுனி' மற்றும் 'மெளனகுரு'. இந்தப் படங்களில் த்ரில்லர், எமோஷன்ஸ், ரொமான்ஸ், ஆக்ஷன் மற்றும் புதிர் என அனைத்தும் இருக்கும். அதேபோல, இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் புதிய படமும் குறிப்பிட்ட ஒரு வகைக்குள் இருக்காது; அடங்காது எனக்கூறப்படுகிறது.
தன்னுடைய புத்திசாலித்தனமான படங்கள் தேர்வால் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நன் மதிப்பைப் பெற்று வருபவர், நடிகர் அர்ஜூன். 'கைதி', 'மாஸ்டர்' மற்றும் 'அந்தகாரம்' ஆகியப்படங்களில் அவருடைய வித்தியாசமான கதாபாத்திரம் சினிமா பயணத்தில் அவரது வளர்ச்சிக்கு அடுத்தகட்டமாக அமைந்தது. அந்த வரிசையில் இந்தப்படத்திலும் தனித்துவமான கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார்.