தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

''காதல்னு வந்துட்டா...” ; வெளியானது இயக்குநர் ராமின் புதிய படத்தின் டைட்டில் வீடியோ

இயக்குநர் ராம் இயக்கத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கும் படத்திற்கு ’ஏழு கடல், ஏழு மலை’ என பெயரிடப்பட்டுள்ளது.

By

Published : Oct 11, 2022, 4:31 PM IST

வெளியானது இயக்குநர் ராமின் புதிய படத்தின் டைட்டில் வீடியோ
வெளியானது இயக்குநர் ராமின் புதிய படத்தின் டைட்டில் வீடியோ

’கற்றது தமிழ்’, ’தங்க மீன்கள்’, ‘பேரன்பு’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ராம் இயக்கத்தில் மலையாள நடிகரான நிவின் பாலி, நடிக்கும் படத்திற்கு ”ஏழு கடல், ஏழு மலை” என பெயரிடப்பட்டுள்ளது. வி ஹவுஸ் பிரொடெக்‌ஷன் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் அஞ்சலி மற்றும் சூரி நடிக்கும் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் படம் குறித்த அறிவிப்பு வந்ததிலிருந்தே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரிக்க தொடங்கிய நிலையில், ராமின் பிறந்தநாளான இன்று, இந்த படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

படத்தின் டைட்டில் வீடியோவின் இறுதியில் ''காதல்னு வந்துட்டா மனசு மட்டுமல்ல; உடம்பு, உசுரு எல்லாம் பறக்கும்'', எனும் வசனம் ஒலிக்கிறது. அதன்படி இயக்குநர் ராமுக்கே உரித்தான பாணியில் இந்த திரைப்படம் காதல் கதைகளத்துடன் அமைக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

இதையும் படிங்க:ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் கார்த்தி குரலில் வெளியான ‘ஏறுமயிலேறி’ பாடல்

ABOUT THE AUTHOR

...view details