தமிழ்நாடு

tamil nadu

"லெஸ்பியன் படங்களா?" என மறுத்த திரையரங்குகள் : கடுப்பான ராம் கோபால் வர்மா

By

Published : Apr 5, 2022, 6:57 PM IST

Updated : Apr 5, 2022, 8:02 PM IST

தன் படத்தைத் திரையிட மறுக்கும் ஐநாக்ஸ் மற்றும் பிவிஆர் திரையரங்கு நிறுவனங்களுக்கு எதிராக இயக்குநர் ராம் கோபால் வர்மா வழக்குத் தொடர்ந்துள்ளார்.

லெஸ்பியன் படங்களை திரையிட முடியாது - ஐநாக்ஸ்,பிவிஆர் : கடுப்பான ராம் கோபால் வர்மா
லெஸ்பியன் படங்களை திரையிட முடியாது - ஐநாக்ஸ்,பிவிஆர் : கடுப்பான ராம் கோபால் வர்மா

இயக்குநர் ராம்கோபால் வர்மா மாற்று சினிமாக்களை சின்ன பட்ஜெட்டில் தயாரித்து இயக்கி வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் தற்போது பான் இந்தியா படமாக 'காட்ரா' என்ற ஹிந்தி படத்தைத் தயாரித்து, இயக்கியிருக்கிறார். இந்தப் படம் தெலுங்கில் 'டேஞ்சரஸ்' என்ற பெயரிலும், தமிழில் 'காதல் காதல்தான்' என்ற பெயரிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.

'லெஸ்பியன் படங்களைத் திரையிட மாட்டோம்':இந்தப் படம் வரும் ஏப்ரல் 8ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில் இந்தப் படத்தினை திரையிட மாட்டோம் என்று பிரபல திரையரங்கு அமைப்புகளான ஐநாக்ஸூம், பி.வி.ஆரும் அறிவித்துள்ளன. 'இந்த ‘காட்ரா’ திரைப்படம் லெஸ்பியன் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டது என்பதால் திரையிட விரும்பவில்லை…' என்று அந்த தியேட்டர் நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.

லெஸ்பியன் படங்களைத் திரையிட முடியாது - ஐநாக்ஸ்,பிவிஆர் : கடுப்பான ராம் கோபால் வர்மா

இதுகுறித்து ராம்கோபால் வர்மா தனது ட்விட்டரில், 'உச்ச நீதிமன்றமே சட்டப்பிரிவு 377இன் படி லெஸ்பியன் பழக்கம் சட்டப்படி குற்றமல்ல என்று சொல்லியுள்ளது. மேலும், சென்சார் போர்டும் இந்தப்படத்தைப் பார்த்து சான்றிதழும் வழங்கியுள்ளது. அதன் பின்பும் லெஸ்பியன்ஸ் என்பதை மட்டுமே அடிப்படையாக வைத்து படத்தைத் திரையிட மறுப்பது எந்த வகையில் நியாயம்? லெஸ்பியன் சமூகத்திற்கு எதிர்ப்பாளராக இந்தத் தியேட்டர் நிர்வாகத்தினர் இருக்கிறார்கள் என்று தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது' என்று கூறியுள்ளார்.

மேலும் 'இது மனித உரிமைக்கு எதிரான செயல். லெஸ்பியன் சமுதாயம் மட்டுமல்ல. அனைத்துத் தரப்பினரும் பிவிஆர், ஐநாக்ஸ் திரையரங்கு நிர்வாகத்தின் செயலுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ரஜினிக்கு மகனாகும் சிவகார்த்திகேயன்?

Last Updated : Apr 5, 2022, 8:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details