தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

கேன்ஸ் படவிழாவில் பா.இரஞ்சித்தின் 'வேட்டுவம்'..! - கான்ஸ்

கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ், நீலம் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் ,பா.இரஞ்சித் எழுதி இயக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கேன்ஸ் படவிழாவில் வெளியிடப்படுகிறது.

கான்ஸ் படவிழாவில் பா.இரஞ்சித்தின் ‘வேட்டுவம்’..!
கான்ஸ் படவிழாவில் பா.இரஞ்சித்தின் ‘வேட்டுவம்’..!

By

Published : May 15, 2022, 4:27 PM IST

கலைத்துறையில் குறிப்பாக சினிமாத்துறையில் லாப நோக்கோடு மட்டுமே படங்களை இயக்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்தியில் இங்கு பேசவேண்டிய, காட்சிப்படுத்தவேண்டிய, மறக்கப்பட்ட, மறுக்கப்பட்ட மனித வாழ்வின் பக்கங்களை படம்பிடித்து காட்ட ஒரு நிறுவனமாக நீலம் புரொடக்சன்ஸ் இயக்குநர் பா.இரஞ்சித்தால் ஆரம்பிக்கப்பட்டது.

பரியேறும்பெருமாள் படத்திலிருந்து தொடங்கப்பட்ட இந்தப் பயணம் ’இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு’, ’ரைட்டர்’, ’குதிரைவால்’,
’சார்பட்டா பரம்பரை’, எனத் தனித்துவமிக்க படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு கொடுத்திருக்கிறது. அடுத்து ’சேத்துமான்’, ’ஜெ.பேபி’, ’பொம்மை நாயகி’, ’நட்சத்திரம் நகர்கிறது’, என அடுத்தடுத்த படங்கள் வெளியீட்டிற்குத் தயாராக இருக்கின்றன.

இதனைத்தொடர்ந்து நீலம் புரொடக்சன்ஸ் தமிழ் சினிமாவைத்தாண்டி தனது பயணத்தைத் தொடங்க தனது சிறகை இன்னும் விரித்து பறக்க நீலம் ஸ்டூடியோஸ் தொடங்கியிருக்கிறது. நீலம் ஸ்டூடியோவோடு கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் இணைந்து முதல் தயாரிப்பாக இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ’வேட்டுவம்’ எனும் திரைப்படம் & தொலைக்காட்சி தொடர் இயக்கப்படுகிறது. இதனை பா.இரஞ்சித் எழுதி இயக்குகிறார்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கேன்ஸ் படவிழாவில் வெளியிடப்படுகிறது. இதில் பா.இரஞ்சித் கலந்துகொள்கிறார். இந்தத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொடரை இயக்குநர் பா.இரஞ்சித், அபயானந்த் சிங், பியுஷ் சிங், சவுரப் குப்தா, மற்றும் அதிதி ஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். அஸ்வினி சவுத்ரி மற்றும் பரூல் சிங் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். படத்தில் பணிபுரியும் நடிகர், நடிகையர் மற்றும் தொழிற்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

இதையும் படிங்க: சரத் பவார் குறித்து சர்ச்சை கருத்து பதிவிட்ட பிரபல நடிகை கைது

ABOUT THE AUTHOR

...view details