தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

இசையமைப்பாளராக களமிறங்கும் மிஷ்கின் - மிஷ்கின் இசை

முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைக்கும் “டெவில்” படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

மிஷ்கின் முதன்முறையாக இசை அமைக்கும் டெவில்!
மிஷ்கின் முதன்முறையாக இசை அமைக்கும் டெவில்!

By

Published : Jun 28, 2022, 4:46 PM IST

மாருதி பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் R.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் ‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘டெவில்’. இப்படத்தில் அறிமுக நடிகையான சுபஸ்ரீ ராயகுரு மற்றும் விதார்த், பூர்ணா, ஆதித் அருண் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இதில் இயக்குநர் மிஷ்கினும் நடிக்கின்றார்.

மாறா, குதிரைவால் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கார்த்திக் முத்துகுமார் இப்படத்தின் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார். இயக்குநர் மிஷ்கின் முதன்முறையாக “டெவில்” திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

மிஷ்கின் முதன்முறையாக இசை அமைக்கும் டெவில்!

மிஷ்கின் இதற்கு முன்னதாக பாடலாசிரியராகவும், பாடகராகவும் பல பாடல்களில் பாடிய மிஷ்கின், அவர் இயக்கிய படங்களில் பின்னணி இசையிலும் அவரது பங்கு முக்கியமானது. தற்போது ”டெவில்” திரைப்படத்திற்கு நான்கு பாடல்கள் இசை அமைத்து கொடுத்துள்ளார். விரைவில் இப்படத்தின் பாடல்களை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க:மனம் திறந்த சூப்பர் ஸ்டார்.. வாழ்க்கையை திசை திருப்பிய அந்த ஒரு தருணம்...

ABOUT THE AUTHOR

...view details