இயக்குநர் ஹரி இயக்கத்தில் இன்று (ஜூலை 1) திரையரங்குகளில் வெளியான ‘யானை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்திற்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் ஹரி இயக்கத்தில் முதன் முறையாக கூட்டணி வைத்து அவரின் மச்சானான அருண் விஜய் நடித்துள்ள படம் ’யானை’. இப்படம் இன்று உலகம் முழுவதும் 1,100 திரையரங்குகளில் வெளியாகியுள்ளன. படம் திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி மீண்டும் இயக்குநர் ஹரி தனது பாணிக்கு திரும்பிவிட்டதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர். இதனையடுத்து இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் இருவரும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் காட்சி முடிந்த பின்னர் பேட்டியளித்த இருவரும், இந்தத் திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ளதாக மக்கள் கூறியதாக தெரிவித்தனர்.
மேலும், அனைவரும் திரையரங்குகளில் வந்து படம் பார்க்க வேண்டும் என்றும் இப்படம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் என்றும் கூறினர்.
இதையும் படிங்க: வெளியானது "பத்தல...பத்தல.." பாடல் வீடியோ