மீசைய முறுக்கு, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ஆகியப் படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஹரிஹரன் ராம் இயக்கத்தில் நடிகர் ரியோ ராஜ் நடித்து வெளியாகவுள்ள படத்திற்கு 'ஜோ' என தலைப்பிடப்பட்டுள்ளது.
'விஷன் சினிமா ஹவுஸ்' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பிரபல தொகுப்பாளரும், நடிகருமான ரியோ கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக பாவ்யா, த்ரிகா ஆகியோர் நடித்துள்ளார்.