தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'LGM' பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தல தோனி! - kollywood updates

பிரபல கிரிக்கெட் வீரர் தோனி தனது 'தோனி என்டர்டெயின்மென்ட்' என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வெளியாகவுள்ள ’லெட்ஸ் கெட் மேரிட்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை அவரது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 11, 2023, 1:27 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி ''தோனி என்டர்டெயின்மென்ட்'' (dhoni entertainment) என்ற நிறுவனம் தொடங்கி திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார். தேனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தை அவரது மனைவி சாக்ஷி தோனி நிர்வகித்து வருகிறார்.

தோனி தயாரிக்கும் தமிழ்ப்படத்தின் தலைப்புடன் கூடிய மோஷன் போஸ்டர் கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்டுப் படத்தின் பூஜையும் நடைபெற்றது. இந்தப் படத்தில் நதியா, ஹரீஷ் கல்யாண், ''லவ் டுடே'' நாயகி இவானா, யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர்.

’லெட்ஸ் கெட் மேரிட்’ (lets get married) என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கி வருகிறார். இவர் தோனி நடித்த ''அதர்வா தி ஆர்ஜின்'' என்ற காமிக்ஸ் நாவலை எழுதியவர் ஆவார். ''லெட்ஸ் கெட் மேரிட்'' படத்திற்கு இவரே இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்'எல்.ஜி. எம்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை எம். எஸ் தோனி தன்னுடைய அதிகாரப்பூர்வமான சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ஃபீல் குட் ஃபேமிலி எண்டர்டெய்னராக தயாராகி வரும் இப்படத்தின் தயாரிப்பாளரான விகாஸ் ஹசிஜா பேசுகையில், ''LGM சிறப்பாக உருவாகி வருகிறது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.விரைவில் படத்தின் பின்னணி இசை வேலைகளைத் தொடங்கவிருக்கிறோம். தமிழ் திரையுலகில் எங்களின் சிறப்பான பயணம் தொடங்கியுள்ளது. மேலும் இது நல்ல அனுபவங்களையும் வழங்கி இருக்கிறது.'' என்றார்.

படத்தின் படைப்புத்திறன் நிர்வாக தலைவரான பிரியன்சு சோப்ரா பேசுகையில், '' எல் ஜி எம் புதுமையான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் பல ஆச்சரியமளிக்கும் விஷயங்கள் இடம்பெற்றிருக்கிறது. திறமை வாய்ந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர்களின் முழுமையான பங்களிப்புடன் இந்த படைப்பு உருவாகி வருகிறது. நேர்த்தியாகவும், தோழமையுடனும் தயாராகி வரும் இதனை நாங்கள் மிகவும் ரசிக்கிறோம்'' என்றார்.

இதையும் படிங்க:'அயோத்தி' படக்குழுவை பாராட்டிய ரஜினிகாந்த்.. சசிகுமார் ரியாக்‌ஷன் என்ன?

ABOUT THE AUTHOR

...view details