தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நாளை வெளியாகிறது தனுஷின் 'தி க்ரே மேன்' ட்ரெய்லர்! - தி க்ரே மேன் ட்ரைலர்

நடிகர் தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படமான 'தி க்ரே மேன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகவுள்ளது என தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நாளை வெளியாகிறது தனுஷின் ’தி க்ரே மேன்’  ட்ரைலர்
நாளை வெளியாகிறது தனுஷின் ’தி க்ரே மேன்’ ட்ரைலர்

By

Published : May 23, 2022, 10:34 PM IST

நடிகர் தனுஷ், மார்வெல் சூப்பர் ஹீரோ படங்கள் மூலம் பிரபலமான ஆண்டனி மற்றும் ஜோ ரூஸோ ஆகியோரின் இயக்கத்தில் 'தி க்ரே மேன்' எனும் ஹாலிவுட் படத்தில் தற்பொழுது நடித்து வருகிறார்.

நெட்பிளிக்ஸ் நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரித்து வரும் இந்தப் படத்தின் புகைப்படங்களை நெட்பிளிக்ஸ் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியிட்டது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

இந்நிலையில் நாளை ’தி க்ரே மேன்’ படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாக இருப்பதாகவும்; மேலும் படம் ஜூலை மாதம் 22ஆம் தேதி வெளியாக உள்ளது என சூப்பர் அப்டேட் ஒன்றை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பினை தனுஷ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இதற்கு முன்னதாக ஹாலிவுட்டில் தனுஷ் நடித்த ‘தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்’ எனும் ஹாலிவுட் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இரண்டாவது முறையாக தனுஷ் நடிக்கும் ’தி க்ரே மேன்’ பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:திருச்சியில் நயன்தாரா - விக்னேஷ் சிவன்!

ABOUT THE AUTHOR

...view details