தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

தனுஷின் வாத்தி ரிலீஸ் தேதி அறிவிப்பு - GV Prakash announces Dhanushs Vaati release date

நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள ’வாத்தி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharatதனுஷின் வாத்தி ரிலீஸ் தேதி அறிவிப்பு
Etv Bharatதனுஷின் வாத்தி ரிலீஸ் தேதி அறிவிப்பு

By

Published : Nov 17, 2022, 6:31 PM IST

Updated : Nov 17, 2022, 8:05 PM IST

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் ‘வாத்தி’. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனை தமிழில் 'வாத்தி' என்ற பெயரிலும், தெலுங்கில் 'சார்' என்ற பெயரிலும் ரிலீஸ் செய்யவுள்ளனர்.

சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் நாகவம்சி தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'வாத்தி' படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார்.

இந்நிலையில் 'வாத்தி' திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கெனவே அறிவித்திருந்தது. பிறகு படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் வாத்தி படத்தின் ரிலீஸ் தேதியை இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி அடுத்த ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி வாத்தி படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'பொறாமை, வெறுப்பு இல்லாமல் இருங்கள்' - ரசிகர்களுக்கு அஜித் அட்வைஸ்!

Last Updated : Nov 17, 2022, 8:05 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details