இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட ராக்கெட்ரி படம் நாளை(ஜூலை 1) வெளியாகிறது. இப்படத்தை நடிகர் மாதவன் நடித்து இயக்கியுள்ளார்.
இப்படத்தின் சிறப்புக் காட்சி இன்று(ஜூன் 30) பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள் படத்தை வெகுவாகப் பாராட்டினர்.
மாதவனின் நடிப்பு மற்றும் இயக்கம் மிகவும் சிறப்பாக உள்ளதாகத் தெரிவித்தனர். மேலும், இந்தப் படத்தில் ’பஞ்சாங்கம்’ என்ற வார்த்தை வரும் இடத்தில் அந்த வார்த்தையை மியூட் செய்துள்ளனர். அதேபோல் பஞ்சாங்கத்தை காட்டும் காட்சியில் அதனை பிளர் செய்துள்ளனர்.
மாதவன் சமீபத்தில் பஞ்சாங்கம் குறித்து பேசியது விமர்சனத்திற்குள்ளான நிலையில் தற்போது அந்த வார்த்தை மியூட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நடிகர் கமலுக்கு கோல்டன் விசா!