சென்னை: நடிகர் விக்ரம் நடிப்பில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ’கோப்ரா’. இந்தத் திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக தயாரிப்பாளர் லலீத் தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் விக்ரம் ஏழு கெட்டப்களில் நடித்துள்ளதால் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகியுள்ளது.
கோப்ரா ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு - நடிகர் விக்ரம்
நடிகர் விக்ரம் நடிப்பில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்ரா ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு...!
சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. பல்வேறு கட்ட பிரச்சினைகளைக் கடந்து இப்படம் இம்மாதம் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் வரும் 25ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, படத்தின் ட்ரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.