தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

வெளியானது ’பிளாக் பாந்தர் : வக்கண்டா ஃபாரவர்’ டீசர் - பிளாக் பாந்தர் வக்கண்டா ஃபாரவர்

இயக்குநர் ரியான் கூக்லர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிளாக் பாந்தர் : வக்கண்டா ஃபாரவர்’ டீசர் வெளியாகியுள்ளது.

வெளியானது ’பிளாக் பாந்தர் : வக்கண்டா ஃபாரவர்’ டீசர்
வெளியானது ’பிளாக் பாந்தர் : வக்கண்டா ஃபாரவர்’ டீசர்

By

Published : Jul 24, 2022, 3:54 PM IST

மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பிளாக் பாந்தர் : வக்கண்டா ஃபாரவர்’ டீசரை வெளியிட்டுள்ளது. பிரம்மாண்ட காட்சிகளுடன், பாப் மார்லியின் ‘நோ உமன், நோ க்ரை’ பாடலுடன் தொகுக்கப்பட்டு இந்த டீசர் ரசிகர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தை ‘பிளாக் பாந்தர் ’ முதல் பாகத்தை எடுத்த இயக்குநர் ரியான் கூக்லர் இந்தப் படத்தையும் எடுத்துள்ளார்.

பிளாக் பாந்தர் முதல் பாகத்தில் நடித்த சாட்விக் போஸ்மன் கடந்த 2020ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில், அவரை நினைவூட்டும் வகையில் அவரின் புகைப் படங்கள் படத்தின் காட்சிகளில் இடம்பெறும் வால் போஸ்டர்களில் இடம்பெற்றுள்ளன.

மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் லுபிதா நியொங்கோ, லெதிதியா வ்ரைட், டனை குரிரா, ஃபுலோரன்ஸ் கசும்பா, வின்ஸ்டன் டியூக் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் நவம்பர் மாதம் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க: ’வருகிறான் சோழன்’ : ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் காட்சிக்கு பின்னால்..!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details