தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

தற்போது தான் கமல்ஹாசனை நேரில் பார்க்கிறேன் - புகழ்! - Director Ponram

நடிகர் கமல்ஹாசனை தற்போது தான் நேரில் பார்ப்பதாக குக் வித் கோமாளி புகழ் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 26, 2022, 10:40 AM IST

Updated : Nov 26, 2022, 3:26 PM IST

சென்னை : நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து வெளிவர உள்ள டிஎஸ்பி திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விஜய் சேதுபதி "டிஎஸ்பி திரைப்படம் நான் ரொம்ப எதிர்பார்த்த படம். டிசம்பர் 2 வெளியாகிறது. நிச்சயம் உங்க அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்" என தெரிவித்தார்.

இது என்னுடைய 5 ஆவது படம், உலக நாயகன் கமல் இந்த நிகழ்ச்சிக்கு வருகிறார். அது எங்களுக்கு பெருமையாக உள்ளதாக இயக்குனர் பொன்ராம் தெரிவித்தார்.

இது என்னுடைய முதல் படம் எனக்கு இந்த படத்தில் மிகவும் சந்தோஷமாக உள்ளது. இசை மற்றும் ட்ரைலரை நடிகர் கமலஹாசன் வெளியிடுவது மிகவும் சந்தோஷமாக உள்ளது என நடிகை அனு கீர்த்தி வாஸ் கூறினார்.

தற்போது தான் கமல்ஹாசனை நேரில் பார்க்கிறேன் - புகழ்!

இயக்குனர் பொன்ராம் இந்த படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ளார். பாடல்கள் நன்றாக வந்துள்ளதாக இசையமைப்பாளர் இமான் கூறினார்.

"விஜய் சேதுபதியுடன் முதல் படத்தை நான் பண்ணி உள்ளேன், இயக்குனர் பொன்ராம் காமெடி வேண்டுமென்றால் கேட்டுக் கொண்டே இருப்பார், வட்டிக்கு விடுவதைப் போல் எவ்வளவு வேண்டுமானாலும் காமெடியை கொடுங்கள் என்று பொன்ராம் கேட்டுக் கொண்டிருப்பார், உலகநாயகன்
இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. அவரை தற்போது தான் நான் முதல் முறையாக நேரில் பார்க்க உள்ளேன். அதுவே எனக்கு படபடவென்று உள்ளது" என குக் வித் கோமாளி புகழ் தெரிவித்தார்.

இதையும் படிங்க : "எனது உடல்நிலை நன்றாக உள்ளது" - கமல் ஹாசன்

Last Updated : Nov 26, 2022, 3:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details