தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

Thalapathy 68: 'மீண்டும் ராயப்பன்..!': தளபதி 68 கதை இதுவா..? - விஜய்

விஜயின் 68ஆவது திரைப்படத்தை அட்லி இயக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. இதனையடுத்து அதன் கதை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுள்ளார், அட்லி.

Thalapathy 68: ’மீண்டும் ராயப்பன்..!’  : தளபதி 68 கதை இதுவா..?
Thalapathy 68: ’மீண்டும் ராயப்பன்..!’ : தளபதி 68 கதை இதுவா..?

By

Published : May 25, 2022, 6:21 PM IST

விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் ’தளபதி 66’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கு பிறகு ‘தளபதி 67’இல் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணைவார் எனத் தெரிகிறது. இந்நிலையில், அடுத்த வரிசையில் ‘தளபதி 68’இல் இயக்குநர் அட்லியுடன் இணைவார் என ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், நேற்று(மே 24) அமேஸான் பிரைம் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், 'பிகில் படத்தில் இடம்பெற்ற ’ராயப்பன்’ என்கிற கதாபாத்திரத்தை மட்டுமே மையப்படுத்தி ஒரு படம் வந்தால் எப்படி இருக்கும்..? எனப் பதிவிட, அதற்கு மறுபதிவிட்ட அட்லீ “ செஞ்சிட்டா போச்சு...!” எனப் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, தளபதி 68 ’ராயப்பன்’ கதாபாத்திரத்தை மையப்படுத்தியும் எடுக்கப்படலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும், அட்லியின் இந்த ட்வீட் விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

இதையும் படிங்க: உலகளவில் ரூ.100 கோடி வசூலித்த 'டான்'..!

ABOUT THE AUTHOR

...view details