தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'யானை' ரிலீஸ் தேதி மாற்றத்துக்கு இப்படி ஒரு காரணமா?

'யானை' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வரும் ஜூலை 1ஆம் தேதி வெளியாகும் என மாற்றி அறிவிக்கபட்டுள்ளது.

By

Published : Jun 13, 2022, 9:25 PM IST

”விக்ரம்” திரைப்படத்தால் தள்ளிப்போகும் ”யானை” ரிலீஸ் தேதி
”விக்ரம்” திரைப்படத்தால் தள்ளிப்போகும் ”யானை” ரிலீஸ் தேதி

தமிழ்த்திரையில் முக்கிய நாயகனாக வலம் வரும் அருண் விஜய், இயக்குநர் ஹரியுடன் முதன்முறையாக கூட்டணி சேர்ந்து உருவாகியுள்ள திரைப்படம் 'யானை'.

டிரம்ஸ்டிக் புரொடக்ஷன் சார்பாக தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி S.சக்திவேல் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

கடந்த ஜூன் 3ஆம் தேதி வெளியான 'விக்ரம்' திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் திரைப்படம் ஜூன் 17 அன்று வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டிருந்த 'யானை' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வரும் ஜூலை 1ஆம் தேதி வெளியாகும் என மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

'விக்ரம்' படத்தின் வெற்றியையடுத்து இயக்குநர் ஹரி, அருண் விஜய் உள்ளிட்ட 'யானை' படக்குழுவினர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த புகைப்படத்தை பதிவிட்டு, ரிலீஸ் தேதியினை தள்ளிவைப்பதை ட்விட்டரில் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:விரைவில் வருகிறது 'ஸ்குவிட் கேம்' இரண்டாவது சீசன்!

ABOUT THE AUTHOR

...view details