வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ்(white carpet films) சார்பில் K.விஜய் பாண்டி தயாரிப்பில், கதாநாயகனாக அருள்நிதி நடித்து வரும் திரைப்படம் 'தேஜாவு'. இப்படத்தினை அறிமுக இயக்குனரான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கி வருகிறார். இப்படத்தில் மதுபாலா, அச்சுத் குமார், ஸ்மிருதி, ராகவ் விஜய், சேத்தன், 'மைம்' கோபி, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், படக்குழுவினர் வெளியீட்டிற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். இத்திரைப்படம் படத்தின் நாயகன் அருள்நிதியின் பிறந்த நாளான ஜுலை 21ஆம் தேதி வெளியிடவிருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.