கேன்ஸ்(ஃபிரான்ஸ்): தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையின் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் நேற்று(மே 18) நடந்த கேன்ஸ் பட விழாவில் வெளிநாட்டு திரைக்கலைஞர்கள் இந்தியாவில் படமெடுக்க உதவும் வகையில் இரு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.
1.ஒலி-ஒளி துணைதயாரிப்பிற்கான ஊக்கத்தொகை திட்டம்,2. வெளிநாட்டுப் படங்களை படமெடுக்க ஊக்கத்தொகை திட்டம் ஆகிய திட்டங்கள் இந்திய ஊடக மற்றும் பொழுதுபோக்கு துறையின் ஆற்றலை வெளிப்படுத்தும்.
நேற்று நடந்த கேன்ஸ் திரைப்படவிழாவில் இந்தியாவின் பெவிலியனைத் தொடங்கி வைத்த அமைச்சர் தாக்கூர், “ இந்திய சினிமா என்பது மனித திறமைகள், வெற்றி, மற்றும் புதிய இந்தியாவிற்கான பாதைகள் பற்றிய கதைகள், இந்திய மக்களின் நம்பிக்கைகள், அனுபவங்கள், நெறிகள் , கனவுகள், சாதனைகளை பிரதிபலிப்பதில் தவறியதில்லை.