கமல்ஹாசன் ஹீரோவாக நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், காயத்ரி, என பல நடிகர்கள் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா ‘ரோலக்ஸ்’ என்ற கதாபாத்திரத்துடன் கெளரவ தோற்றத்தில் நடித்திருந்தார்.
ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ‘விக்ரம்’ திரைப்படம் வசூலில்லும் மிகப்பெரும் சாதனை படைத்தது. கடந்த 8 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகையுள்ள ’விக்ரம்’ திரைப்படத்தை பல பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர். அதன் படி கேஜிஎஃப் படத்தின் இயக்குநரான பிரஷாந்த் நீல் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“மொத்த குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள். கமல் சார், விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஆகியோரை திரையில் ஒன்றாக பார்ப்பதே திரை விருந்தாக அமைந்தது. லோகேஷ் எப்போதும் உங்கள் வேலையைப் பெரிதும் ரசிப்பவன். இன்னும் ரோலக்ஸ் கதாப்பாத்திரத்திலிருந்து மீள முடியவில்லை.”, என தெரிவித்துள்ளார். இதற்கு லோகேஷ் கனகராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.
இதே போல் பிரேமம் பட இயக்குநரான அல்போன்ஸ் புத்ரனும், “ எனக்கு ஏஜெண்ட் டீனா, ஏஜெண்ட் உப்புலியப்பன் , ஏஜெண்ட் ’விக்ரம்’ ஆகியோரை பிடித்தது. சந்தானம் கதாப்பாத்திரம் தானோஸ்க்கு இணையாக உள்ளது, வெகு நாட்களுக்கு பிறகு விஜய் சேதுபதியின் சந்தானம் கதாப்பாத்திரம் மிகவும் பிடித்தது”, எனவும் மேலும், இதே போல் ரோலக்ஸ், அமர், பிரபஞ்சன், போலீஸ் அதிகாரியான ஜோஸ் என அனைத்து கதாப்பாத்திரங்களையும் புகழ்ந்துள்ளார்.
’விக்ரம்’ படத்தை புகழ்ந்த பிரேமம் பட இயக்குநர்
இதையும் படிங்க:ஓடிடி தளத்தில் வெளியாகும் ’வீட்ல விசேஷம்’