சென்னை: பொன்மகள் வந்தாள், இரும்பு மனிதன் உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அகில் கதாநாயகனாக நடித்திருக்கும் 'ரேஸர்' திரைப்படம் வரும் 7ஆம் தேதி திரைக்கு வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த லாவண்யா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பாளர் ராஜா மேடையில் பேசுகையில், ”ரேஸர் ஒரு சிறிய திரைப்படம். அதனால் சிறிய படங்கள் என்றாலே ஜெனிஷை (விநியோகஸ்தர்) தான் தேடுகின்றனர். இந்த படத்துக்கு போதுமான திரையரங்குகள் கிடைக்காது. சிறு பட தயாரிப்பாளர்கள் நசுக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். சினிமாவை காப்பாற்றுவதே சிறு படங்கள் தான். கல்பாத்தி அகோரம், உதயநிதி படம் என்றால் உடனே திரையரங்குகளில் இருந்து பணம் வந்துவிடும். ஆனால் இதுவரை என்னுடைய பணம் திரையரங்கில் இருந்து வரவில்லை” என பேசினார்.
இயக்குநர் சாட்ஸ் ராக்ஸ் மேடையில் பேசுகையில், “இந்த படத்தில் நிறைய விஷயங்கள் இருக்கிறது. இந்த படத்துக்காக எங்களை நம்பி வந்தவர் தான் தயாரிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி. இந்த கதையைப் பற்றிக் கூறும் போது கதாநாயகி லாவண்யா நடிப்பதாகக் கூறினார். லாவண்யா நிறைய ஆதரவு கொடுத்துள்ளார்” என்றார்
பயில்வான் ரங்கநாதன் மேடையில் பேசுகையில், “சங்கங்களைக் குறை சொல்வதை தவிர்த்து விடுங்கள். திரைத்துறையைக் கற்றுக்கொண்டு படம் எடுக்க வாருங்கள். டாடா, லவ் டுடே படங்கள் போல் ரசிக்கும் படி படம் எடுத்தால் ஓடும். அஜித் பைக் ரேஸராக இருக்கும் போது அவருக்கே ஸ்பான்ஸர் கிடையாது. அவரால் ஸ்பான்ஸர் பிடிக்க முடியாமல் பைக் ரேஸில் இருந்து விலகிவிட்டார்.