ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடித்த ‘துணிவு’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியானது. வங்கி கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் 150 கோடிக்கு மேல் வசூல் செய்து ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.
நெட்பிளிக்ஸில் ரிலீஸாகும் 'துணிவு' அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி!! - tamil cinema news
நடிகர் அஜித்குமார் நடித்த துணிவு திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் பிப்ரவரி 8ஆம் தேதி வெளியாகிறது
நெட்பிளிக்ஸில் ரிலீஸாகும் ‘துணிவு’; ரசிகர்கள் மகிழ்ச்சி
துணிவு திரைப்படத்தின் ஒடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ள நிலையில் எப்போது வெளியிடப்படும் என ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்திருந்த நிலையில், நெட்பிளிக்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் துணிவு திரைப்படம் பிப்ரவரி 8ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: தளபதி 67 படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்!