கடந்த சில நாட்களுக்கு முன்பு, கன்னட நடிகர் கிச்சா சுதீப் ஒரு திரைப்பட விழாவில், 'பேன் இந்தியத் திரைப்படமான 'கேஜிஎஃப்' கன்னடத்தில் வெளியானது என்று சிலர் சொன்னார்கள், நான் அதில் சிறிய திருத்தம் செய்ய விரும்புகிறேன்.
ஹிந்தி ஒரு போதும் தேசிய மொழியாகாது. பாலிவுட் திரைப்படங்களும் பேன் இந்தியத் திரைப்படங்களை தயாரிக்கின்றன. ஆனால், அந்தத் திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானாலும் வெற்றியைக் காண முடியவில்லை. ஆனால், நாம் இன்று எங்கும் வெற்றிகாணும் திரைப்படங்களைத் தயாரித்து வருகிறோம்' எனத் தெரிவித்தார்.
என்றும் ஹிந்தியே தேசிய மொழி:இதற்குத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்த பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், “சகோதரர் கிச்சா சுதீப் அவர்களே, உங்களைப் பொறுத்தவரையில் ஹிந்தி தேசிய மொழி இல்லை என்றால் எதற்காக உங்களின் திரைப்படங்களை ஹிந்தியில் டப் செய்து வெளியிட வேண்டும்..?
அன்றும், இன்றும், எப்போதும் நமது தாய் மொழி மற்றும் தேசிய மொழி ஹிந்தி தான். ஜன கண மன“ எனத் தெரிவித்தார்.
இதற்கு நடிகர் கிச்சா சுதீப் தனது ட்விட்டர் பக்கத்தில், “ நீங்கள் தெரிவித்த கருத்தை ஹிந்தியில் தெரிவித்திருந்தாலும் நான் அதைப் புரிந்துகொண்டேன். அதற்குக்காரணம் நாங்கள் ஹிந்தியை மதித்து, படித்தது தான்.