தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

கத்ரீனா கைஃப், விக்கி கவுஷலுக்குக் கொலை மிரட்டல்! - கத்ரீனா கைஃப்

சல்மான் கானை அடுத்து தற்போது பாலிவுட் ஜோடியான கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கவுஷலுக்குக் கொலை மிரட்டல் வந்துள்ளது.

கத்ரீனா கைஃப், விக்கி கவுஷலுக்கு கொலை மிரட்டல்
கத்ரீனா கைஃப், விக்கி கவுஷலுக்கு கொலை மிரட்டல்

By

Published : Jul 25, 2022, 1:27 PM IST

நட்சத்திர ஜோடியான கத்ரீனா மற்றும் விக்கி கவுசலுக்குக் கடந்த ஆண்டு, டிசம்பர் 9ஆம் தேதி ராஜஸ்தானில் திருமணம் நடந்தது. இந்நிலையில் கத்ரீனா மற்றும் விக்கி ஆகியோருக்கு சமூக வலைதளங்களில் கொலை மிரட்டல் வந்ததை அடுத்து மும்பை காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

அடையாளம் தெரியாத நபர் மீது சான்டாக்ரூஸ் காவல் நிலையத்தில் நட்சத்திர ஜோடிகள் தரப்பு புகார் அளித்துள்ளதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனால், இதுகுறித்து இதுவரை கத்ரீனா மற்றும் விக்கி இருவரும் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இதற்கு முன்னதாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் மற்றும் அவரது தந்தை சலீம் கானுக்கும் ஒரு மாதத்திற்கு முன்பு கொலை மிரட்டல் கடிதம் வந்ததாகக்கூறப்படுகிறது. அந்த கடிதத்தை சலீமின் பாதுகாப்பு ஊழியர்கள் கண்டுபிடித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சலீம், பொதுவாக தனது காலை நடைப்பயிற்சியின்போது ஓய்வு எடுக்கும் பெஞ்சில் இந்த கடிதம் கிடைத்துள்ளது.

அந்தக் கடிதத்தில், 'கடந்த மே 29ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்ட பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலாவுக்கு ஏற்பட்ட கதியே தந்தை-மகன் இருவருக்கும் நேரிடும்’ என்று எழுதப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் இதுகுறித்து கடந்த வாரம், சல்மான், மும்பை காவல்துறை தலைமையகத்திற்கு தெற்கு மும்பை அலுவலகத்தில் கமிஷனர் விவேக் பன்சால்கரை சந்தித்து தனது பாதுகாப்பிற்காக ஆயுத உரிமம் கோரி மும்பை காவல்துறையிடம் எழுத்துப்பூர்வ விண்ணப்பத்தை அவர் சமர்ப்பித்துள்ளார்.

இதேபோல் நவம்பர் 2021இல், நடிகை கங்கனா ரனாவத் ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள காவல் நிலையத்தில் சமூக வலைதளங்களில் தனது பதிவிற்கு சில நபர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகப் புகார் அளித்தார், என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:’நான் தற்கொலை செய்துகொள்ள கூட நினைத்தேன்..!’ - மிதுன் சக்கரவர்த்தி

ABOUT THE AUTHOR

...view details