தனித்துவமான, தரமான திரைப்படைப்புகள் மூலம் தனது தனித்தன்மையை திறமையை நிரூபித்தவர், இயக்குநர் ஹலிதா ஷமீம். பெரும்பாலான பெண் திரைப்பட இயக்குநர்கள் பெண்களை மையமாகக் கொண்ட மற்றும் வலுவான உள்ளடக்கம் சார்ந்த கதைக்களங்களைத் தேர்ந்தெடுக்கும் அதே வேளையில், ஹலிதா தனது ஃபீல்-குட் ரோம்-காம்ஸ் மற்றும் சிறந்த மென்மையான பொழுதுபோக்கு திரைப்படங்கள் மூலம் உலகளாவிய ரசிகர்களின் இதயங்களை வென்றார்.
'சில்லுக்கருப்பட்டி’, 'ஏலே' மற்றும் அமேசான் பிரைம் வீடியோவின் ஆந்தாலஜி தொகுப்பின் ஒரு பகுதியான 'புத்தம் புது காலை விடியாதா' என்ற ஆழமான உணர்ச்சிப்பூர்வமான படைப்பில் "லோனர்ஸ்" போன்ற அழகியல் ரீதியாக அவர் வழங்கிய கதைகள் நம்பிக்கையூட்டும் அணுகுமுறையுடன் நம்மை வசீகரிக்கின்றன.
இவரைப் பற்றிய இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், திரைப்படத் துறையில் ஒரு திரைப்படத்தை 7 ஆண்டுகளுக்கும் மேலாக எடுத்து வருகிறார். முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், அவர் ஒரு நோக்கத்திற்காக அடுத்த கட்ட படப்பிடிப்பை 7 ஆண்டுகளாகத் தொடங்க ஒருபோதும் முயற்சி செய்யவில்லை. இது அவரது லட்சியத் திரைப்படமான 'மின்மினி' பற்றியது, அதன் படப்பிடிப்பு 7 ஆண்டுகள் முன்பு (2015)ல் தொடங்கப்பட்டது.
இந்த திரைப்படம் குழந்தைகளாக இருந்து, இளம் வயதினராக மாறுபவர்களின் கதை. இதன் முதல் பகுதியை, அவர் 2015ஆம் ஆண்டில், குழந்தை பருவப்பகுதிகளை படமாக்கினார் மற்றும் அவர்கள் வளர்ந்து முதிர்ச்சியடைந்த தோற்றத்தைக் காண 7 ஆண்டு இடைவெளியை விட்டுவிட்டார். இந்நிலையில், தற்போது இப்படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளார். அவரது இந்த புது முயற்சி கோலிவுட்டில் மட்டுமின்றி மற்ற பிராந்தியத் திரைத்துறையினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவர்கள் இந்தத் திரைப்படத்திற்கான அவரது முழுமையான உழைப்பு, நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் பிரமிப்பில் உள்ளனர்.