சென்னை: சின்னக் குயில் என்று அன்போடு அழைக்கப்படுபவர் பிரபல பின்னணி பாடகி சித்ரா. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடா, இந்தி என பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். இளையராஜா இசையில் இவர் பாடிய பாடல்கள் எப்போதும் தனி சுகம் தருபவை.
இவர் எஸ்.பி.பி, மனோ, யேசுதாஸ் என முன்னணி ஜாம்பவான்களுடன் நிறைய பாடல்களை பாடியுள்ளார். இன்றைய இளம் தலைமுறை இசை அமைப்பாளர்கள் படங்களிலும் பாடல்கள் பாடி வருகிறார். அனிருத் தொடங்கி தமன் வரை எல்லோரது இசையிலும் பாடல்கள் பாடியுள்ளார். சமீபத்தில் விஜய் நடித்த வாரிசு படத்தில் தமன் இசையில் "ஆராரி ராரிரோ" என்ற பாடல் பாடி இருந்தார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் தங்கர் பச்சான் இயக்கி உள்ள "கருமேகங்கள் கலைகின்றன" என்ற படத்தில் சித்ரா பாடல் பாடி உள்ளார். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்து உள்ளார். இப்பாடலை வைரமுத்து எழுதி உள்ளார். இதன் பாடல் பதிவின் வீடியோ தற்போது வெளியிடபட்டுள்ளது. 39 ஆண்டுகளுக்கு முன்னர் வைரமுத்து எழுதிய "பூஜைக்கேத்த பூவிது" என்ற பாடலை சித்ரா பாடி இருந்தார். அதுதான் வைரமுத்து வரிகளில் சித்ரா பாடிய முதல் பாடலாகும்.
இதுகுறித்து வைரமுத்து, "39ஆண்டுகளுக்குப் முன் எழுதிய பூஜைக்கேத்த பூவிது பாடலை பாடிய அதே பாடகி சித்ராவை நான் பாடல் பதிவில் சந்தித்தேன். அதே குரல்.. அதே கனிவு.. அதே பணிவு.." என்று குறிப்பிட்டுள்ளார். இயக்குனர் தங்கர் பச்சான் பாடலை பற்றி குறிப்பிடும் போது "நான் ஒளிப்பதிவாளனாக அறிமுகமாகிய (மலைச்சாரல்-1990) திரைப்படத்தில் வைரமுத்து பாடல்களை எழுதினார்.