தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

அஜித், விஜய் மீம்களோடு ரசிகர்களை ஈர்க்கும் வகையில் உருவாகியுள்ள 'அடியே' மோஷன் போஸ்டர்! - gv prakash

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ்குமார், கௌரி கிஷன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'அடியே' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 29, 2023, 11:49 AM IST

சென்னை: இசை அமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் ஜீவி பிரகாஷ்குமார். அவரது நடிப்பில் த்ரிஷா இல்லனா நயன்தாரா, டார்லிங், ஜெயில் உள்ளிட்ட படங்கள்‌ ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து பல படங்களுக்கும் இசை அமைத்து வரும் நிலையில் தற்போது ஜீ.வி.பிரகாஷ்குமார் கதையின் நாயகனாக 'அடியே' என்ற படத்தில் நடித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'திட்டம் இரண்டு' படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் 'அடியே'. இப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக, நடிகை கௌரி கிஷன் நடித்துள்ளார். நடிகை கௌரி கிஷன் விஜய் சேதுபதி நடித்த 96 படத்தின் மூலம் பிரபலமடைந்தவர்.

இவர்களுடன் இயக்குநரும், நடிகருமான வெங்கட் பிரபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை முத்தையன் கவனிக்க, கலை இயக்கத்தை சிவசங்கர் மேற்கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தை மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம் குமார் தயாரித்துள்ளார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ஜெயம் ரவி அவருடைய இணையதள பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்துள்ளார்.

'அடியே' படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், ''தமிழில் ஏராளமான அறிவியல் புனைவு கதைகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் அறிவியல் புனைவு சார்ந்த கதைக்களத்துடன் மல்ட்டி வெர்ஸ் தொழில்நுட்ப பின்னணியில் காதலை சொல்வதில் 'அடியே' திரைப்படம் தான் முதல் படைப்பு. இத்திரைப்படத்தின் ஒரு நிமிடத்திற்கு மேலான மோஷன் போஸ்டர் வெளியிடப்படுகிறது. இதன் இறுதியில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வித்தியாசமாக தோன்றுவது ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை அளிக்கும் '' என்றார்.

'அடியே' படத்தின் மோஷன் போஸ்டரில், இலங்கை பிரதமர் சீமான் மெட்ராஸ் வருகை, 'யோகன் அத்தியாயம் 1' 150 நாள் போஸ்டர், 'தல' அஜித் குமார் ஆஸ்திரேலியன் கிராண்ட் பிரிக்ஸ் ஃபார்முலா 1 பந்தயத்தில் ஐந்தாவது முறையாக வென்றிருப்பது, தமிழ்நாடு திரைப்பட நடிகர் சங்கம் புது கட்டிட திறப்பு விழாவில் விஷால் தலைமையில் ராதாரவி திறந்து வைக்கிறார், சூப்பர் ஸ்டார் மன்சூர் அலிகான் நடிக்கும் 3.0 என மல்ட்டி வெர்ஸ் உலக கலாட்டாவை புதிய தொழில்நுட்ப பின்னணியுடன் விவரித்திருப்பதும், இதன் ஊடாக நாயகன் ஜீ வி பிரகாஷ் குமார் அப்பாவியாகவும், அர்த்தமுள்ள பார்வையுடனும் தோன்றுவது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

இதையும் படிங்க:Viduthalai part 1: ஓடிடியில் வெளியானது வெற்றிமாறனின் விடுதலை

ABOUT THE AUTHOR

...view details