சென்னை: நடிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் அருந்ததி, சிங்கம், பாகுபலி உள்ளிட்ட படங்களில் பிரபலமடைந்தவர். அனுஷ்கா சமீபத்திய பேட்டியில் தனக்கு அரிய வகை நோய் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அந்தப் பேட்டியில், 'எனக்கு அரிய வகை சிரிக்கும் வியாதி உள்ளது. நான் சிரிக்கத் தொடங்கினால் 15 முதல் 20 நிமிடங்கள் வரை கட்டுப்படுத்த முடியாமல் சிரித்துக்கொண்டே இருப்பேன். சில நேரங்களில் நான் சிரிக்க துவங்கினால் படப்பிடிப்பு கூட நின்றுவிடும்' எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய நரம்பியல் நிபுணர் நரேந்திரன் கூறும்போது, 'சிரிக்க ஆரம்பித்தால் அடக்க முடியாமல் சிரிப்பது மற்றும் சம்பந்தமில்லாத இடத்தில் சிரிப்பது இது இரண்டும் ஒரு பிரச்சனையாக இருக்கலாம்.