ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் டி.முருகானந்தம் தயாரிப்பில், ’பிசாசு 2’ திரைப்படம் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ளது. கதையின் நாயகியாக ஆண்ட்ரியா நடிக்க, உடன் பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் விஜய் சேதுபதி கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு, கார்த்திக் ராஜா இசையமைக்க, சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் தெலுங்கு பதிப்பிற்காக ஆண்ட்ரியா முதன்முதலில் தெலுங்கில் டப்பிங் பேசியுள்ளார். இதன் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதி உள்ளிட்ட தகவல்கள் விரைவில் வெளியாகவுள்ளது.
முதல் முதலில் தெலுங்கில் டப்பிங் பேசிய ஆண்ட்ரியா! மேலும், ஆண்ட்ரியா கதாநாயகியாக நடித்துள்ள ’வட்டம்’ திரைப்படம் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க:letterboxd இணையதள தரவரிசை பட்டியல் - இரண்டாம் இடம் பிடித்த ’கடைசி விவசாயி’ திரைப்படம்