இயக்குநர் ராஜ்குமார் சந்தோஷியின் 'Bad Boy' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானபோது, படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்த நடிகை அம்ரின் தனது ஆற்றல் நிரம்பிய நடிப்பிற்காக பாராட்டைப் பெற்றார். அவரது நடிப்புத் திறமையையும், அசத்தலான பெர்ஃபாமன்ஸை அனைவரும் பாராட்டினர். இதனால், பாலிவுட்டில் ஒரு புதிய மற்றும் அற்புதமான திறமை பிறந்தது என்றும் கூறினர். அவர் சமீபத்தில் மிட்-டே ஐகானிக் ஷோபிஸ் விருதுகளால் (2003) 'முன்னணியில் சிறந்த பெண் நடிகை' விருது பெற்றார். அத்தகைய மதிப்புமிக்க விருதைப் பெற்ற பிறகு சினிமாவில் அறிமுகமான சிறிது நாட்களிலேயே அனைவராலும் பேசப்பட்டார்.
இப்போது, நடிகை அம்ரினிடம் இருந்து மேலும் ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. இவர், பாலிவுட்டில் மட்டுமின்றி தென் திரையுலகிலும் தடம் பதிக்கிறார். பாலிவுட் மற்றும் தென் திரையுலகம் இரண்டும் அவரது அதீத நடிப்புத் திறமையைக் கவனிக்கின்றன, அதனால்தான் அவர் தென் இந்தியாவைச் சேர்ந்த நான்கு பெரிய தயாரிப்பு நிறுவனங்களால் அடுத்தடுத்த படங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
நடிகை அம்ரினின் அறிமுக படத்தில் அவரது நடிப்பால் ஈர்க்கப்பட்டு, ஸ்டூடியோ கிரீன், பிரின்ஸ் பிக்சர்ஸ், எஸ்விசிசி மற்றும் சரஸ்வதி ஃபிலிம் டிவிஷன் (தாகூர் மது) போன்ற பெரிய தென்னிந்திய தயாரிப்பு நிறுவனங்கள் நடிகை அம்ரினை அணுகி வரவிருக்கும் தங்கள் பெரிய பட்ஜெட் படங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளன. பெரிய நட்சத்திரங்களை வைத்து முக்கியமான படங்களை தயாரித்து வரும் ‘ஸ்டுடியோ க்ரீன்’ நிறுவனம் தற்போது ‘சூர்யா 42’ என்ற பெரிய படத்தை தயாரித்து வருகிறது. இதில், சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சமீபத்தில் 'சர்தார்' என்ற பிளாக்பஸ்டர் படத்தை வழங்கியது.
தயாரிப்பாளர் லக்ஷ்மண் தனது பேனரில் தற்போது 'சர்தார் 2' படத்தை தொடங்க பிஸியாக இருக்கிறார். பாபி மற்றும் பிரசாத் ஆகியோர்களின் பேனரான SVCC-ன் கீழ் பல பெரிய மற்றும் வெற்றிகரமான படங்களையும் தயாரித்துள்ளனர். தாகூர் மது தனது பெயரில் பல பேனர்களை வைத்துள்ளார். மேலும் அவரது சரஸ்வதி திரைப்பட பிரிவு, அம்ரினை அவரது திரைப்படங்களில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளது.