ஹைதராபாத்:நடிகர்விஜய் தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில், தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகிறார். தில் ராஜு தயாரித்து வரும் இந்தப் படத்தில் கதாநாயகியாக தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துவருகிறார்.
இப்படத்தில் சரத்குமார், ஷாம், யோகிபாபு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். சென்டிமென்ட், ஆக்ஷன், காதல், காமெடி என அனைத்தும் கொண்ட படமாக 'தளபதி 66' உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜயின் தந்தையாக நடிகர் சரத்குமார் நடிக்க உள்ளார். கடந்த மாதம் பூஜையுடன் தளபதி 66 படப்பிடிப்பு தொடங்கி 3ஆம் கட்டமாக ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.