சென்னை: நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவரின் ரசிகர் மன்றங்கள் நேற்றுவரை ஒன்றாகவே இயங்கி வந்துள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தங்கள் ரசிகர்கள் மன்றங்களைப் பிரித்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இரு நடிகர்களின் தற்போதைய ரசிகர் மன்றங்களின் நிலை:நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி, இருவரும் தற்போதைய சூழலில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற பல மொழிகளிலும் இருவருக்கும் பெரியளவில் ரசிகர் பட்டாளம் இருக்கின்றது.