தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

படப்பிடிப்பில் நடிகர் விஷால் மீண்டும் காயம் - mark antony

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் ’மார்க் ஆண்டனி’ படப்பிடிப்பின் போது நடிகர் விஷால் காயமடைந்தார்.

படப்பிடிப்பில் நடிகர் விஷால் மீண்டும் காயம்
படப்பிடிப்பில் நடிகர் விஷால் மீண்டும் காயம்

By

Published : Aug 11, 2022, 1:01 PM IST

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம், ’மார்க் ஆண்டனி’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடந்து வரும் நிலையில், நேற்று நடந்த படப்பிடிப்பில் ஆக்‌ஷன் காட்சியில் பங்கேற்ற போது நடிகர் விஷால் கால் முட்டியில் காயமடைந்தார்.

உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் தற்போது ஓய்வு எடுத்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக 'லத்தி' படத்தின் ஆக்‌ஷன் காட்சி படப்பிடிப்பின்போதும் நடிகர் விஷால் காயம் அடைந்தார்.

மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து வருகின்றனர். 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ' பட நாயகி ரிது வர்மா நாயகியாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் இந்தப் படம் உருவாகிவருகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார்.

இதையும் படிங்க:முதல் படத்திலேயே அதிதிக்கு இவ்வளவு சம்பளமா?

ABOUT THE AUTHOR

...view details