தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

Mark Antony: "போன்ல டைம் ட்ராவலா..?" - வெளியானது 'மார்க் ஆண்டனி' டீசர்! - டீசர்

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி (Mark Antony) படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Mark Antony
மார்க் ஆண்டனி

By

Published : Apr 28, 2023, 7:33 AM IST

Updated : Apr 28, 2023, 7:44 AM IST

சென்னை: நடிகர் விஷால் சமீப காலமாக ஆக்ஷன் படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் ஆர்யாவுடன் இணைந்து நடித்த 'எனிமி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. என்றாலும் கூட அதனைத் தொடர்ந்து 'லத்தி' என்ற படத்தில் போலீசாக நடித்திருந்தார். இப்படமும் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. இந்த நிலையில் தான் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிப்பதாக புதிய தகவல் அறிவிக்கப்பட்டது.

ஆதிக் ரவிச்சந்திரன் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' என்ற படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர். ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான அந்த படம் அடல்ட் படமாக ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதனை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை இயக்கினார். இப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி விமர்சனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் மார்க் ஆண்டனி(Mark Antony) என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், சுனில், ரிது வர்மா என ஏராளமான முன்னனி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இப்படத்தில் நடித்தவர்களின் கெட்டப் ரசிகர்களை கவர்ந்தது.

இதையும் படிங்க: Mark Antony: விஷாலின் மார்க் ஆண்டனி குழுவை பாராட்டிய நடிகர் விஜய்!

இந்த நிலையில் நேற்று மார்க ஆண்டனி படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. முன்னதாக விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் நடிகர் விஜய்யை சந்தித்து இந்த படத்திற்கான டீசரை காட்டி ஆசி பெற்றுள்ளனர். அவ்வாறு சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை நடிகர் விஷால் #thalapathyvijayformarkantoy என்ற ஹேஷ் டேக்குடன் வெளியிட்டார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத்தீ போல வைரலானது.

அதைத் தொடர்ந்து மார்க் ஆண்டனி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. டைம் டிராவல் படமாக உருவாகி உள்ள இப்படத்தின் டீசரில் போன் மூலமாக டைம் ட்ராவல் செய்து வருவதாக காட்டப்படுகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

டீசரில் இரண்டு விதமான விஷால் இரண்டு விதமான எஸ்.ஜே சூர்யா வருகிறார்கள். டைம் டிராவல் செய்து இருவரும் வந்துள்ளதாக வசனங்கள் மூலம் தெரிய வருகிறது. ஜி.வி பிரகாஷ் குமாரின் பின்னணி இசை படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கு அதிகளவில் ஈடு கொடுத்துள்ளது. தற்போது இந்த படத்தின் டீசர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் மார்க் ஆண்டனி படக்குழுவினர் அளவில்லாத மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதையும் படிங்க: PS2 செய்தியாளர் சந்திப்பில் அடுத்தடுத்து கண் கலங்கிய நடிகர்கள்!

Last Updated : Apr 28, 2023, 7:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details