சென்னை: தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பசங்க படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் விமல். அதனை தொடர்ந்து களவாணி, வாகை சூட வா போன்ற வெற்றிப் படங்களிலும், கிராமத்து கதைகளிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனியிடம் பிடித்தவர்.
இவர் சமீபத்தில் நடித்த "விலங்கு" இணைய தொடர் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில் இவர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சமூக வலைத்தளங்களில் ஒரு வதந்தி பரவியது. இதனை அறிந்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.