தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரியுடன் மீண்டும் இணையும் விஜய்சேதுபதி?! - விஜய் சேதுபதி

நடிகர் விஜய்சேதுபதி, இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரியின் கதையில் நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரியுடன் இணையும் விஜய்சேதுபதி..!
இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரியுடன் இணையும் விஜய்சேதுபதி..!

By

Published : Jun 16, 2022, 5:50 PM IST

தற்போதைய தமிழ் சினிமாவின் பரபரப்பான நடிகர் என்றால் அது நடிகர் விஜய்சேதுபதி தான். அடுக்கடுக்காக பல படங்கள் தன் கைவசம் வைத்துள்ளார், விஜய்சேதுபதி. இந்நிலையில் புஷ்கர் - காயத்திரி, விஜய் சேதுபதியை வைத்து ஏற்கெனவே 'விக்ரம் வேதா’ எனும் ஓர் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துள்ளார்.

இது இவ்வாறு இருக்க விஜய் சேதுபதி, புஷ்கர் - காயத்ரியிடம் மும்பையில் கதை கேட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி சொன்ன கதை அவருக்கு மிகவும் பிடித்துப்போக, அதன் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் நடிகர் விஜய்சேதுபதி ஈடுபட்டு வருவதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரியின் இயக்கத்தில் நாளை(ஜூன் 16) அமேசான் பிரைம் ஓடிடியில் ‘சுழல்’ எனும் இணையத் தொடர் வெளியாகவுள்ளது.

மேலும், அவர்கள் இயக்கத்தில் நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், சயிப் அலி கான் நடிப்பில் ஹிந்தியில் தயாராகும் ’விக்ரம் வேதா’ ஹிந்திப் பதிப்பின் படப்பிடிப்பும் சமீபத்தில் முடிவடைந்ததாக அப்படக்குழுவினர் அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Thalapathy 66: லீக் ஆனதா தளபதி 66 படத்தின் தலைப்பு..?

ABOUT THE AUTHOR

...view details