தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

Mark Antony: விஷாலின் மார்க் ஆண்டனி குழுவை பாராட்டிய நடிகர் விஜய்! - Leo movie

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தின் டீசரை பார்த்த நடிகர் விஜய் படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 27, 2023, 1:01 PM IST

சென்னை: நடிகர் விஷால் 0நடிப்பில் கடைசியாக லத்தி திரைப்படம் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி(Mark Antony) படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் எஸ்ஜே சூர்யா, சுனில், ரிது வர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார்.

இப்படத்தில் உள்ள அனைவரும் வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ளனர். இந்த படத்தின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' திரைப்படம் அடல்ட் படமாக இருந்ததால் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இதனால் இப்படத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டீஸர் இன்று மாலை வெளியாக உள்ளது. இதனை ஒட்டி விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் நடிகர் விஜய்யை சந்தித்துள்ளனர். 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் டீஸரை விஜய்யிடம் காண்பிக்க படக் குழுவினர் அனுமதி கேட்டு தொடர்பு கொண்ட போது விஜய் உடனே அழைப்பு விடுத்தார்.

இதையும் படிங்க:Dhanush: 'கேப்டன் மில்லர்' படப்பிடிப்பு தடை தொடர்கிறது.. தென்காசியில் நடப்பது என்ன?

விஷால் - விஜய் சந்திப்பின் போது 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் டீஸர் கண்டு மகிழ்ந்து படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார் விஜய். அதற்காக நன்றி தெரிவித்த நடிகர் விஷாலிடம் "நண்பனுக்காக இதை செய்யமாட்டேனா" என்று விஜய் கூறியது படக்குழுவினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

விஜய்க்கு படக்குழுவினர்கள் பூங்கொத்து வழங்கினார்கள். விஷால் வழக்கம் போல் பூங்கொத்தை தவிர்த்து விஜய் பெயரில் அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் உணவு வழக்கியதற்கான ரசீதையும் அவரிடம் வழங்கினார். அதன் பின் தனது நீண்ட நாள் விருப்பமான திரைப்படம் இயக்கும் ஆசை 'துப்பறிவாளன் 2' மூலம் தொடங்கியுள்ளதாக விஷால் நடிகர் விஜயிடம் கூறினார்.

மேலும் தொடர்ந்து திரைப்படங்களை இயக்க உள்ளதாகவும் தங்களுக்கும் இரண்டு கதை தயார் செய்துள்ளதாக நடிகர் விஜயிடம் நடிகர் விஷால் கூறிய போது "நீ வா நண்பா நான் இருக்கிறேன் சேர்ந்து பயணிப்போம்" என்று கூறி விஜய் மேலும் உற்சாகப்படுத்தினர். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் விஷால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக சினிமா வட்டாரத்தில் செய்திகள் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது

இச்சந்திப்பின் போது 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் தயாரிப்பாளர் 'மினி ஸ்டூடியோஸ்' வினோத் குமார், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், ஒளிப்பதிவாளர் அபிநந்தன், நிர்வாக தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க:"இந்தில பேசாதீங்க.. தமிழ்ல பேசுங்க.. ப்ளீஸ்!" - ஏ.ஆர்.ரஹ்மான் அன்புக் கட்டளை!

ABOUT THE AUTHOR

...view details