சென்னை: மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இயக்குநராக வலம் வருபவர், லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் ரூ.450 கோடி வரை வசூலித்தது. அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு அதிகம் வசூலித்த படங்களில் விக்ரம் படமும் இணைந்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது விஜய்யை வைத்து 'லியோ' என்ற படத்தை இயக்கி வருகிறார். இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனால் 'லியோ' படத்திற்கு ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டு உள்ளனர். காரணம், லோகேஷ் கனகராஜ் தனது படங்களை ஹாலிவுட்டில் வரும் மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ் போல், லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்சாக இயக்கி வருகிறார். விக்ரம் படத்தில் இவர் இதற்கு முன் இயக்கிய கைதி படத்தின் கதாபாத்திரங்கள் வருவது போல், திரைக்கதை அமைத்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இதனால், தற்போது விஜய்யை வைத்து இயக்கி வரும் 'லியோ' படமும் அதேபோல் சினிமாட்டிக் யுனிவர்சில் வருமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
அதேபோன்று 'விக்ரம்' படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் கேரக்டரில் வந்து ரசிகர்களை பரவசப்படுத்தினார். இதனால் இப்படத்திலும் சூர்யா, கமல் உள்ளிட்டோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் த்ரிஷா, மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
Camp fire முன் கெத்தாக நின்ற 'லியோ' படக்குழு - வைரலாகும் புகைப்படம்! - thalapathy 67 update
காஷ்மீரில் லியோ படக்குழுவினருடன் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Etv Bharat
இந்த நிலையில் லியோ படக்குழுவினர் விஜய்யுடன் இணைந்து காஷ்மீரில் புகைப்படம் எடுத்துள்ளனர். இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடுங்குளிரிலும் படக்குழு உற்சாகமாகப் பணியாற்றி வருகின்றனர். 'லியோ' திரைப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நடிகர் விஜயின் 'வாரிசு ஓடிடி ரிலீஸ்'... எப்போது தெரியுமா?