நடிகர் சூர்யா அடுத்து வெளியாகவுள்ள 'விக்ரம்' படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் பாலாவின் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார். இதனைத்தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையே இயக்குநர் ’சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். ஏற்கெனவே பேசப்பட்டுவந்த இப்படத்தின் தற்போதைய நிலவரப்படி ஜூலையில் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளனர். இந்தக் கதை ஒரு பீரியட் படம் என்ற தகவலும் உண்மைதான்.
சூர்யா - சிறுத்தை சிவா இணையும் 'பீரியட் படம்'! - சூர்யா
இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் படம் பீரியட் படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
சூர்யா - சிறுத்தை சிவா இணையும் 'பீரியட் படம்'..!
இது இப்போதைய ட்ரெண்டிங் ஆன ஒரு பான் இந்தியா படமாக உருவாகலாம் என்றாலும் முற்றிலும் புது மாதிரியான கதை என்கிறார்கள். மேலும், ஜூலை 23இல் சூர்யாவின் பிறந்தநாள் வருகிறது. எனவே சிவாவின் படத்தை அன்று தொடங்கவும், பாலா - சூர்யாவின் பட டைட்டில், ஃபர்ஸ்ட் லுக்கை அன்று வெளியிடவும் திட்டமிட்டு வருகிறார்கள் என்பதுதான் இப்போது வந்திருக்கும் தகவல் ஆகும்.
இதையும் படிங்க: மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லும் டி.ராஜேந்தர்