தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"டில்லிக்கு அப்புறம் தான் ரோலக்ஸ் ஆமே... பார்ப்போம்.." - நடிகர் சூர்யா!

Japan Movie Function : நடிகர் சங்கம், உழவன் பவுண்டேசன் என தன்னைவிட கார்த்தியை முழுமையாக பார்ப்பதாகவும், தன்னை விட கார்த்தியை பிடிக்கும் என தன்னிடமே ரசிகர்கள் கூறுவார்கள் என்றும் ஜப்பான் பட விழாவில் நடிகர் சூர்யா தெரிவித்தார்.

surya
surya

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 28, 2023, 10:26 PM IST

சென்னை : ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ஜப்பான். இப்படத்தில் அனு இம்மானுவேல் நாயகியாக நடித்துள்ளார். ஜீவி பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்ஆர் பிரபு தயாரித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று (அக். 28) சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கார்த்தி, இயக்குநர்கள் ராஜு முருகன், கே.எஸ்.ரவிக்குமார், பா.ரஞ்சித், லோகேஷ் கனகராஜ், எச்.வினோத், சுசீந்திரன், முத்தையா, சிறுத்தை சிவா, சத்யராஜ், தமன்னா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஜப்பான் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார்.

பின்னர் நடிகர் சூர்யா மேடையில் பேசுகையில், "அழகான நாளாக்கிய அனைவருக்கும் நன்றி. கார்த்திகிற்கு எல்லாம் கிடைக்க காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி. உலகத் தமிழர்கள் அனைவரும் கார்த்திக்கு ஒரு அழகான பயணத்தை கொடுத்து உள்ளனர். 20 வருடங்களுக்கு முன்பிருந்து கூற வேண்டியது இருக்கிறது.

பருத்திவீரன் படம் கமல் பூஜை போட்டு ஆரம்பித்தது. படம் வெளியான பின்பு கார்த்தி சரியாக பயன்படுத்திவிட்டார் என்று ரஜினி பாராட்டினார்.
ஒரு அண்ணனாக நான் கார்த்திக்கு செய்ததை விட இவர்களுக்கு நன்றி கூறி ஆரம்பிக்கிறேன்‌. மணிரத்னம், ஞானவேல் ராஜா, அமீர், தயாரிப்பாளர் பிரபு ஆகியோருக்கு நன்றி.

இவ்வளவு கஷ்டப்பட்டதற்கு 4 பன்றி குட்டிகளை வாங்கி என்றெல்லாம் நினைப்பு வந்தது. ஆனால் இப்படி படங்களை உருவாக்க காரணமாக இருந்த ரசிகர்கள் உங்களுக்குத்தான் நன்றி. தம்பியின் புதிய படம் வந்தாலும் அதில் 25 சதவீதம் புதிய கார்த்தியை பார்க்கிறேன்‌. என்னைவிட என் தம்பியை தான் பிடிக்கும் என்று என்னிடமே ரசிகர்கள் கூறி உள்ளனர்.

கார்த்தி, தான் இஷ்டப்பட்டதை மட்டுமே செய்ய வேண்டும் என்று அதற்காக தேர்ந்தெடுத்து உண்மையாக உழைத்துள்ளார். நினைத்து இருந்தால் எத்தனையோ படங்கள் நடித்திருக்கலாம். ஆனால் தேர்ந்தெடுத்து 25 படங்கள் நடித்துள்ளார். மனிதர்கள் எப்பேற்பட்டவர்கள் என்றால் மகத்தான சல்லிகள் என்பதே இப்படம்.

நல்ல வேளை லோகேஷ் என்று ஒருத்தர் வந்தார். ரோலக்ஸ் என்று பண்ண வைத்தார். மொத்தமாக எல்லாவற்றையும் கலைத்து விட்டார். சிவா உடன் நான் இணைந்துள்ள கங்குவா பிரமாதமாக வந்து கொண்டிருக்கிறது. நீங்கள் பொறுமை காப்பதற்கு சிறப்பாக கங்குவா வர இருக்கிறது.
வாழ்க்கை போட்டியாக பார்க்காமல் முழுமையாகவும் பார்க்க வேண்டும்.

வேலை, பெற்றோர், நண்பர்கள், சமுதாயத்தையும் பார்க்க வேண்டும். நான் பண்ண வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் அனைத்தையும் செய்தது கார்த்தி தான். வருடத்தில் 2 முறையாவது பெற்றோரை கூட்டி வெளிநாடு போய் விடுவான். அவனால் அவனது குழந்தைகளை தூங்க வைக்க முடியும்.

கல்லூரி முடித்து 25 வருடம் ஆகி விட்டது, இன்னும் அவரது நண்பர்களை சந்தித்து வருகிறார். நடிகர் சங்கத்தை பார்த்து வருகிறார். உழவன் பவுன்டேஷன் என என்னைவிட நான் கார்த்தியை முழுமையாக பார்க்கிறேன். ஜப்பான் கார்த்திக்கு 25-வது படம். எனக்கு சிங்கம் 25-வது படம். நன்றி. டில்லிக்கு அப்புறம் தான் ரோலக்ஸ் ஆமே... பார்ப்போம்" என்று நடிகர் சூர்யா தெரிவித்தார்‌.

இதையும் படிங்க :"எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் வந்தியத்தேவனுக்கு இதைத்தான் பரிசாக அளித்திருப்பார்" - நடிகர் சத்யராஜ்!

ABOUT THE AUTHOR

...view details