சிவகங்கை: தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் பல கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் கடந்த மார்ச் மாதம் 3 ஆம் தேதி பார்வையாளர்களுக்காக தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. இங்கு நகர நாகரிகத்திற்கு சாட்சியாக அக்காலகட்டத்தில் உபயோகப்படுத்தப்பட்ட பொருட்கள் அனைத்தும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட நடிகர் சூர்யா ஜோதிகா அக்காலத்தில் கல்வி பயின்றதற்கான சாட்சியங்கள், தமிழர்களின் நாகரீக வளர்ச்சி மற்றும் வாழ்க்கை முறையை அடையாளப் படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆராய்ச்சி சார்பில் சிறப்புற காட்சிப்படுத்தியுள்ளது. இதனை காண நாள்தோறும் அதிகப்படியான மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்த கள அருங்காட்சியகத்தை திரைப்பட நட்சத்திர தம்பதிகளான சூர்யா-ஜோதிகா இருவரும் தங்களது குடும்பத்தினருடன் பார்வையிட்டனர். குறிப்பாக சூர்யாவின் தந்தை நடிகர் சிவக்குமாரும் பார்வையிட்டார். அப்போது மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உடனிருந்தார். அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை தொல்லியல் துறை அலுவலர்கள் சிவக்குமார், சூர்யா, ஜோதிகா ஆகியோருக்கு விளக்கமாக எடுத்துக் கூறினர். அதனை அவர்கள் ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொண்டனர். கீழடி அருங்காட்சியகத்தை ஏராளமான திரை பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும், ஆராய்ச்சியாளர்களும், வெளிநாட்டு தூதுவர்களும் பார்த்து செல்கின்றனர்.
இதையும் படிங்க:மீண்டும் தொடங்கிய 'வணங்கான்' பட பணிகள்.. அருண் விஜய் நடிக்கிறார்