சென்னை: விஷன் சினிமா ஹவுஸ்ஸின் ரிச் இந்தியா டாக்டர் D. அருளானந்து தயாரிப்பில், நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் புதிய படமானது பூஜையுடன் (அக்.30) இன்று தொடங்கியது. இந்த விழாவில் தமிழ்த்திரையுலகின் முக்கியப்பிரமுகர்கள், நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டு விழாவைச்சிறப்பித்தனர்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நட்பின் அடிப்படையில் படத்தின் முதல் ஷாட்டை, கிளாப் போர்டு அடித்து தொடங்கிவைத்தார். நடிகர் ரியோ ராஜ் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தப்படத்திற்காக நீண்ட தலைமுடி மற்றும் தாடியுடன் அர்ப்பணிப்புடன் வலம் வருகிறார்.
நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம் இந்த திரைப்படத்தின் கதை உண்மையான அன்பு மற்றும் பல உணர்ச்சிகரமான தருணங்களை உள்ளடக்கியதாக கூறப்படுகிறது. இந்தப்படம் ஆண் மற்றும் பெண் இடையேயான காதல் மற்றும் உறவுகளில் மட்டும் கவனம் குவிக்காமல், பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு இடையேயான எல்லையற்ற அன்பு குறித்தும் பேசவுள்ளதாகத் தெரிகிறது.
நல்ல உணர்வைத்தரக்கூடிய வகையிலான அன்பு, குடும்பங்களின் பாசம் என இளைஞர்களும் பெற்றோர்களும் நிச்சயம் சேர்ந்து திரையரங்குகளில் பார்க்கக்கூடிய வகையிலான படமாகவும், படம்முடிந்து திரும்பிப்போகும் போது நல்ல நினைவுகளைத் தரக்கூடியப்படமாகவும் இது அமையும் என கோலிவுட் வட்டாரத்தில் நல்ல டாக் அடிபடுகிறது.
இன்னும் பெயரிடப்படாத இந்தப்படத்தினை விஷன் சினிமா ஹவுஸின் டாக்டர். டி. அருளானந்து (ரிச் இந்தியா டாக்டர் டி. அருளானந்து என்றும் அறியப்படுகிறார்) தயாரித்திருக்கிறார். 'மீசைய முறுக்கு' படத்தில் உதவி இயக்குநராகவும், 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா' படத்தில் இணை இயக்குநராகவும் பணியாற்றிய ஹரி ஹரன் ராம் இந்தப்படத்தை இயக்குகிறார். ஹரிஹரன் ராம் திரைப்படம் எடுப்பதற்காக, சுமார் 10 ஆண்டுகள் தொடர் முயற்சிகளில் ஈடுபட்ட ராமநாதபுரத்து இளைஞர். எந்தவொரு சினிமா பின்புலமும் இல்லாமல், கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, உணர்வுப்பூர்வமான கதை சொல்லும் திறன் ஆகியவற்றின் மூலம், சினிமாவில் முயற்சித்துக்கொண்டிருந்த இயக்குநர் ஹரிஹரன்ராம் மிகப்பெரிய இடத்தை சினிமாவில் பிடிப்பார் என அவரது கல்லூரி கால நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.
நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம் ரியோ ராஜ் கதையின் நாயகனாக நடிக்க மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா ட்ரிகா படத்தின் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். 'சார்லி', 'கோலமாவு கோகிலா' படப்புகழ் அன்புதாசன், 'கனா காணும் காலங்கள்' புகழ் ஏகன், 'எருமசாணி யூ-ட்யூப்' புகழ் கெவின் ஃபெல்சன், 'கோமாளி', 'வாத்தி' படப்புகழ் ப்ரவீனா மற்றும் பலர் இந்தப் படத்தின் நடிகர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:மாலத்தீவில் ரகுல் ப்ரீத் சிங் கூல் க்ளிக்ஸ்