தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஒரு வாரம் இதயம் மற்றும் நுரையீரல் செயல்படாமல் எக்மோ தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிகை மீனா வீட்டிற்கு நேரில் சென்று அவரது கணவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் மீனா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.