சென்னை: கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ரவியை, நடிகர் ரஜினிகாந்த், இன்று (ஆக. 8) சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆளுநர் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. 25-30 நிமிடங்கள் அவருடன் பேசினேன்.
ஆளுநர் ரவி காஷ்மீரில் பிறந்து, வட இந்தியாவிலேயே அதிகம் வாழ்ந்தவர். தமிழ்நாட்டு மக்களின் கடின உழைப்பு, நேர்மை, ஆன்மீக உணர்வு ஆகியவை அவரை மிகவும் ஈர்த்துள்ளது. தமிழ்நாட்டின் நலனுக்கு எதை செய்யவும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்" என்றார்.
ஆளுநரிடம் அரசியல் பேசினேன் மேலும், ஆளுநரிடம் அரசியல் குறித்து பேசியதாகவும், அதை பொது வெளியில் கூற முடியாது எனவும் கூறினார். மீண்டும் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு, இல்லை என்று தெரிவித்தார்.
ஜிஎஸ்டி வரி உயர்வு குறித்த கேள்விக்கும் பதிலளிக்க மறுத்துவிட்டார். மேலும், அவர் நடிக்கும் 'ஜெயிலர்' திரைப்படத்தின், படப்பிடிப்பு ஆக.15 அல்லது ஆக.22ஆம் தேதி தொடங்கும் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'பா.ரஞ்சித் பகிரங்க மன்னிப்பு கேட்கனும்' - பௌத்த அமைப்பு