தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

செல்வராகவனின் உதவியாளர் படத்தில் கமிட்டான ஜீவா; போடப்பட்ட பூஜை - ஜீவா அடுத்த திரைப்படம்

நடிகர் ஜீவா நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று(டிச.14) சென்னையில் நடைபெற்றது.

ஜீவா நடிக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது!
ஜீவா நடிக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது!

By

Published : Dec 14, 2022, 8:34 PM IST

பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று(டிச.14) நடைபெற்றது. வித்தியாசமான கமர்ஷியல் படமாக உருவாகும் இதில் நாயகனாக ஜீவா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனை இயக்குநர் செல்வராகவனின் உதவியாளர் மணிகண்டன் இயக்கவுள்ளார்.

மேலும், நாயகியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக கோகுல் பினாய், இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா, எடிட்டராக சித்தார்த், ஸ்டன்ட் காட்சிகளின் இயக்குநராக மெட்ரோ மகேஷ், ஆடை வடிவமைப்பாளராக சத்யா பணிபுரியவுள்ளனர்.

பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. இன்று(டிச.14) சென்னையில் நடைபெற்ற பூஜையில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

ஜீவா நடிக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது!

முன்னதாக பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படமொன்றில் ஜீவா நாயகனாக நடித்துள்ளார். இதில் ஜீவா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவு பெற்றுள்ளது. விரைவில் இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க: சிறு பட்ஜெட் படங்களை எடுக்காதீர்கள் - தயாரிப்பாளர் சிவா

ABOUT THE AUTHOR

...view details